சீன அதிபர் ஜின்பிங் ரஷ்யா பயணம்: புடினுடன் சந்திப்பு

மாஸ்கோ: உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய பயணம் மேற்கொண்டார். அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கும் அவர் முறைப்படியான ஆலோசனைகளை இன்று மேற்கொள்கிறார். உக்ரைன் மீதான போரால் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தி வருகின்றன. உக்ரைன் போர் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை பல நாடுகள் புறக்கணிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பிறகு உலகின் 2வது வல்லரசு நாடாகவும், ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியுமான சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யா சென்றுள்ளார்.

நேற்று மாஸ்கோ விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கும் அவர் முறைப்படியான ஆலோசனைகளை இன்று மேற்கொள்கிறார். இந்த சந்திப்பில் சீனா, ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய பொருளாதார ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜின்பிங்கின் ரஷ்ய பயணம் உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: