கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம்: எஸ். சந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

திருத்தணி: கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில், ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் திறந்து வைத்தார். திருத்தணி அடுத்த கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் நேற்று முன் தினம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இங்கு கழிவு நீர் கால்வாய் அமைக்க, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அல்லது சட்டமன்ற மேம்பாட்டு தொகுதி திட்டத்தின்  நிதியில் உடனடியாக  நடவடிக்கை  எடுக்கப்படும்.

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு என்னுடைய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலேயே இந்த ஆண்டே தருகிறேன். இதுவரைக்கும் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அரசு திட்டங்கள் 100 கோடி ரூபாய் அளவில் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நான்  ரூ.6 கோடி அளவிலே வேலைக்கு நிதி வழங்கிருக்கிறேன் என்றார். இதில், திருத்தணி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அகூர் மாணிக்கம், ஒன்றிய நிர்வாகிகள் ராமதாஸ், டில்லி பாபு, ஒன்றிய கவுன்சிலர் நிலா கோவிந்தசாமி, நடராஜன், ரகுபதி, சண்முகம் சிவன் ஐயப்பன், வெங்கடேசன், பார்த்தசாரதி, ஏழுமலை உள்பட மற்றும்  முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: