×

திருவாலங்காடு கிழக்கு ஒன்றியத்தில் ஆயிரம் பேருக்கு நலத்திட்டம்

திருத்தணி : திருத்தணி அடுத்த திருவாலங்காடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வேணுகோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரேசபுரம், ராமலிங்கபுரம், கூர்ம விலாசபுரம், காவேரி ராசபுரம் ஊராட்சிக்குட்பட்ட பங்காரன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திருவலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புடவை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி என ஆயிரம் பேருக்கு நல திட்டங்களும் மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம் களம்பாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் சி.ஜெயபாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், விஜி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன் பொருளாளர் மிதுன் சக்கரவர்த்தி மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், ஒன்றிய தலைவர் ரமேஷ் ஒன்றிய துணை செயலாளர்கள் நீலாவதி சீனிவாசன், கு.க.சண்முகம் மாவட்ட பிரதிநிதிகள் த.தினகரன், எஸ்.ஜெகதீசன், மருத வள்ளிபுரம் வழக்கறிஞர் ஆர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Eastern Union , Welfare scheme for thousand people in Tiruvalangadu East Union
× RELATED செஞ்சி கிழக்கு ஒன்றிய விசிக செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை நீக்கம்