சிறுவாபுரி முருகன் கோயிலில் பங்குனி மாத லட்சார்ச்சனை துவக்கம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் பங்குனி மாத லட்சார்ச்சனை துவங்கியது. பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் உள்ள பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாத 3வது ஞாயிற்றுகிழமையில் முருகனுக்கு பங்குனி மாத சிறப்பு லட்சார்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் பங்குனி மாத சிறப்பு லட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் துவங்கியது.  இதை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலையில் மூலவருக்கு 18 வித மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ரத்தினாங்கி சேவையில் மூலவர் முருகன் அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து 18 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத, முருகனுக்கு லட்சார்ச்சனைகள் துவங்கியது. இதில் சிறுவாபுரி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.லட்சுமணன், தக்கார் சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், கதிர்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: