×

ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று

சென்னை: உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக சமீபத்தில் பதவி ஏற்றார். 38 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் சட்டசபைக்குள் எம்எல்ஏவாக நுழைந்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Ilangovan , EVKS. Ilangovan has mild corona infection
× RELATED ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி