×
Saravana Stores

ஓடிடி தளங்களில் படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி

நாக்பூர்,: படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஓடிடி தளங்களில் ஆபாச வார்த்தைகள் அதிகரித்துவரும் நிலையில், படைப்பாற்றல் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓடிடி தளங்களில் முறைகேடான, ஆபாசமான உள்ளடக்கம் அதிகரித்து வருவதாக எழுந்த புகார்கள், அரசாங்கம் கவனத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த தளங்கள் படைப்பாற்றலுக்கான சுதந்திரம் அளிக்கப்பட்டதே தவிர, துஷ்பிரயோகம் செய்வதற்காக அல்ல என்றார். 90 சதவீத புகார்கள் சொந்த மாற்றங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும், சங்கங்கள் அளவிலும் பெரும்பாலான புகார்கள் தீர்க்கப்படுவதாகவும் கூறினார். அரசு மட்டத்திற்கு வரும்போது, என்னென்ன விதிகள் உள்ளதோ, அந்த துறை ரீதியான கமிட்டி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அனுராக் தெரிவித்தார். மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், அதுகுறித்து தீவிரமாக ஆலோசிப்போம் என்ற அனுராக் தாகூர், இந்த விவகாரத்தில் அரசு பின்வாங்காது என்றார்.

Tags : Union Minister ,Anurak Thakur , Abuse in the name of creativity on OTT platforms will not be tolerated: Union Minister Anurag Tagore in an interview
× RELATED ஒன்றிய அமைச்சர் மனோகர் லால், அமைச்சர்...