×

புனைப்பெயர் வைத்துள்ள நெட்டிசன்கள் சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: அமெரிக்க பத்திரிகையில் வெளியான கட்டுரையில் தகவல்

வாஷிங்டன், மார்ச்சீனாவில் பிரதமர் மோடியின் பெயரை ‘லாவோக்சியன்’ என்ற புனைப்ெபயருடன் சீன நெட்டிசன்கள் குறிப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘டிப்ளமோட்’ என்ற பத்திரிக்கையில், சீனாவில் இந்தியாவை எவ்வாறு பார்க்கின்றனர்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்திய பிரதமர் மோடி, சீன இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். அவர்கள் பிரதமர் மோடியை மரியாதையுடன் புனைப்பெயர் வைத்து அழைக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னை இருந்தபோதிலும், சர்வதேச தலைவர் ஒருவருக்கும் அளிக்கும் மரியாதையை அளிக்கின்றனர்.

உலகின் முக்கிய நாடுகளிடையே இந்தியா சமநிலையை பிரதமர் மோடி பின்பற்றி வருகிறார். சீன சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ெவய்போவை பகுப்பாய்வு நிபுணர் சுன்ஷான் கூறுகையில், ‘சினா வெய்போ என்பது சீனாவில் டுவிட்டர் போன்ற சமூக ஊடக தளமாகும். இது 58 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகின்றனர். பிரதமர் மோடியை சீன இணையவாசிகள், ‘மோடி லாவோக்சியன்’ என்று பெயரிட்டுள்ளனர். ‘லாவோக்சியன்’ என்பது சில திறன்களைக் கொண்ட மிக வயதான அழிக்க முடியாத மனிதனைக் குறிக்கும் சொல்லாடல் ஆகும்.

உலகின் மற்ற தலைவர்களை காட்டிலும் இந்திய பிரதமர் மோடி சற்றே வித்தியாசமானவர் என்றும், வியக்கத்தக்க மனிதர் என்றும் கூறுகின்றனர். மோடியின் உடை மற்றும் உடல் மொழி ஆகியன இந்திய மக்களிடம் இருந்து வேறுபட்டவை என்று கருதுகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இந்தியா நட்புறவு கொள்ள முடியும். கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அளவில் செய்தி வெளியிட்டு வருகிறேன். சீன நெட்டிசன்கள் ஒரு வெளிநாட்டு தலைவருக்கு புனைப்பெயர் வைப்பது என்பது அரிது. மோடிக்கு அவர்கள் பெயர் வைத்து கொண்டாடுகின்றனர்’ என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Modi ,China ,US , Netizens nicknamed Modi 'Laoxian' in China: American newspaper article reveals
× RELATED தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து...