கோவை சாலைத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: சட்டகல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே சாலை தடுப்பில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த விபத்து நேரிட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெல்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஜோசப், சல்மான்.  இவர்கள் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தனர்.

இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வந்தனர். அவருடன் தங்கி இருந்த மற்றொருவருடன் மோட்டார் வாகனத்தை வாங்கி சென்றனர்.இந்நிலையில் நேற்று அறையில் இருந்து அலெக்ஸ் ஜோசப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக நள்ளிரவு 2 மணிக்கு  மலுமிச்சம்பட்டி நோக்கி பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். டீ குடித்துவிட்டு மீண்டும் அறைக்கு வருவதற்காக அருகில் உள்ள சேவை சாலையில் அதிவேகமாக வந்துள்ளனர்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பின் மீது பயங்கரமாக மோதியதில் கல்லூரி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை காவல் துறையினர் மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: