×

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான சிசோடியாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த 9ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்கள் சிலரை கைது செய்தது.

இதன் தொடர்ச்சியாக, கலால் துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிசோடியாவை விசாரணைக்காக இரண்டு முறை வரவழைத்தனர்.

இரண்டாவது முறையாக கடந்த மாதம் 26ம் தேதியன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான சிசோடியாவை அன்று இரவு கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ காவல் கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது மேற்கொண்டு சிபிஐ காவலை அதிகாரிகள் கோராததால் மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்த நிலையில் மணீஷ் சிசோடியா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Delhi Special Court ,Manish Sisodia , Delhi Special Court extends Manish Sisodia's judicial custody for another 14 days
× RELATED ஜாமீன் நீடிப்பு கெஜ்ரிவால் மனு மீது நாளை விசாரணை