திருவேற்காடு நகராட்சியில் ரூ.97 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டான லட்சுமி நகரில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா, 8வது வார்டான விஜிஎன் மகாலட்சுமி நகரில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா அமைக்க நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், இதற்கான பணி ஆணைகள் ஒப்பந்தாரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் 2 பூங்கா அமைக்கும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, 4வது வார்டான கோலடி, 8வது வார்டான ராஜாங்குப்பம் ஆகிய இடங்களில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று திறந்து வைத்தார்.

இதில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்இகே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், பொறியாளர் அ.பு.குமார், சுகாதார ஆய்வாளர் எம்.வெங்கடேசன், மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜே.பவுல்,  நகர்மன்ற உறுப்பினர்கள் உமாபதி, எஸ்.சங்கர், பரிசமுத்து, கேஎஸ்பி.சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: