×

சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய வழக்கின் மனுவை தள்ளுபடி செய்தது: ஐகோர்ட் கிளை

மதுரை: இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி வரும் நிலையில் எதிர்பாளர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தூத்துக்குடியை சேர்ந்த வசந்த குமார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நிலையில். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு ஏப்ரல்.1, 2 ல் நடத்த திட்டம் உள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி காவல் ஆய்வாளரிடம் மனு கொடுத்து உள்ளதாகவும். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, அனுமதி வழங்கவில்லை. பிரச்சனை ஏற்படும் என்பதால் ஸ்டெர்லைட் ஆதரவு , எதிர்ப்பு பேரணி, ஆர்.எஸ்.எஸ்  பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  


Tags : SANATHANATANA ,Hindu Dharma Rise Conference ,iCort , SANATANA HINDU DHARMA ESRUKHI CONFERENCE, SUIT FOR PERMISSION, DISMISSED PETITION, ICOURT BRANCH
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...