×

மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. செல்வகுமார், சண்முகம்  உள்ளிட்ட 61 பேர் தொடர்ந்த வழக்கில் டிஜிபிக்கு உத்தரவளிக்கப்பட்டுள்ளது. அக்குபஞ்சர், எல்க்ட்ரோபதி போன்ற மாற்றுமுறை மருத்துவர்கள் உரிமையில் தலையிட கால்துறைக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் மாற்றுமுறை மருத்துவம் செய்ய மனுதாரர்கள் தகுதி பெறவில்லை என்றும் 6 மாத டிப்ளமோ படிப்பு அங்கீகரிக்கப்பட்டதல்ல என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 6 மாத டிப்ளமோ படிப்பை வழங்கும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  மனுதாரர்கள் சான்றிதழ் பெறவில்லை மற்றும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாததால் மாற்றுமுறை மருத்துவம் செய்ய உரிமையில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


Tags : Court ,DGP , Alternative Medicine, Due Process, Court Order to DGP
× RELATED வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம்...