×

கோயில் கட்டுமான பணிக்காக தோண்டிய குழியில் சிவலிங்கம் கண்டெடுப்பு

கோபி: கோபி அருகே உள்ள திருநகரில் மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது.இந்த கோயிலில் சிவலிங்கம் இல்லாமல் கருட கம்பம் மட்டுமே உள்ளது. மேலும்  கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டுமான பணி கடந்த சில வாரங்களாக   நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயில் கட்டுமான பணிக்காக செட் அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் குழி தோண்டினர்.அப்போது தோண்டப்பட்ட குழியில் சிவலிங்கம் இருந்துள்ளது. இதைக் கண்ட பக்தர்கள்  குழியில் இருந்த சிவலிங்கத்தை எடுத்து சுத்தம் செய்தனர். பிறகு சிவலிங்கத்துக்கு பக்தர்கள் பூஜை செய்தனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில்: இப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சிதிலமடைந்து இருந்தது. மேலும் சிவலிங்கம் இல்லாமல் இருந்த இந்த கோயிலில் கட்டுமான பணியின் போது பிரதோஷ நாளான நேற்று சிவலிங்கம் குழியில் இருந்து கிடைத்துள்ளது பெரும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தனர்.கட்டுமான பணியின் போது கிடைத்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.


Tags : Temple construction work, discovery of Shiv Lingam
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...