கோபி: கோபி அருகே உள்ள திருநகரில் மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது.இந்த கோயிலில் சிவலிங்கம் இல்லாமல் கருட கம்பம் மட்டுமே உள்ளது. மேலும் கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டுமான பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயில் கட்டுமான பணிக்காக செட் அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் குழி தோண்டினர்.அப்போது தோண்டப்பட்ட குழியில் சிவலிங்கம் இருந்துள்ளது. இதைக் கண்ட பக்தர்கள் குழியில் இருந்த சிவலிங்கத்தை எடுத்து சுத்தம் செய்தனர். பிறகு சிவலிங்கத்துக்கு பக்தர்கள் பூஜை செய்தனர்.