சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொன்னதை செய்து இருப்பதாக நன்றி தெரிவித்து மின துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பேசிய பழனிவேல், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்; மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்.15-ம் தேதி தொடங்கும்; தகுதிவாய்ந்தகுடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.
இந்த நிலையில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக முதல்வர் சொன்னதை செய்து இருப்பதாக நன்றி தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: - குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000/- வழங்கிட ஆணையிட்ட, சொன்னதை செய்யும், செய்வதை சொல்லும், திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலினுக்கு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். #TNBudget2023 என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோவை மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கோவையில் ரூ 9,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்.தகவல் தொழிநுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை மற்றும் ஓசூரில் TNTECH CITY அமைக்கப்படும் என அறிவித்த திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin
அவர்களுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்,என்றார்.
