×

ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை

புதுடெல்லி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இன்று காலை தலைநகர் டெல்லி வந்தார். அவரை ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளுதல், இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு  திட்டங்கள், உறவுகள், இந்தோ-பசிபிக் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஜி-7 மாநாடு, இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாடு குறித்து விவாதிக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Japan ,PM ,India , Japan PM visits India: Discusses bilateral relations
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...