திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரில் பொருத்த யாழிகளுக்கு வர்ணமிடும் பணி: 1ம் தேதி தேரோட்ட திருவிழா நடக்கிறது

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா வரும் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆழித்தேரில் பொருத்துவதற்காக யாழி களுக்கு, வர்ணமிடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தி யளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது.

மேலும், கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப் பரப் பினை கொண்ட இக்கோயிலின் மூல வராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய் ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திரு விழாவும் நடைப்பெறுவது வழக்கம்.

இந்நிலையில் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழா வரும் ஏப்ரல் மாதம் 1ந் தேதி நடைபெறுவதையட்டி இதற்கான பந்தல்கால் முகூர்த்தமா னது கடந்த மாதம் 5ந் தேதி நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட் டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொ ண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாக ராஜசுவாமி அமர்ந்து வலம் வருவார். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா வரும் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆழித்தேரில் பொருத்துவதற்காக யாழி களுக்கு,வர்ணம் மிடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாக ராஜசுவாமி அமர்ந்து வலம் வருவார். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

Related Stories: