×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக வழக்கறிஞர் ராஜலெட்சுமி ஆஜராகி முறையீடு செய்து வருகிறார். ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் மனுவும் நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என நீதிபதி குமரேஷ் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதாக நீதிமன்றம் கூறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

Tags : O. Panneerselvam ,High Court ,AIADMK ,general secretary , AIADMK general secretary election, ban, O. Panneerselvam
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்