சென்னை: நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக ரூ.5346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரைத்தீர்வை, சொத்து மாற்று வரி 2%, பதிவுக் கட்டணம் 2% செலுத்த வேண்டும். எளிய, நடுத்தர மக்களுக்கு குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு பெரிதும் பலனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
