சென்னை: நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும். குடிமைப்பணி தேர்வு எழுத விரும்பும் 1,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
