தஞ்சை மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மேலும் 8 நகரங்களில் சங்கமம் கலை விழா நடத்தப்படும். சங்கமம் கலை விழாவுக்காக வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
