15 ஆண்டு பழமையான தனியார் வாகனங்களை அழிக்க விரைவில் கொள்கை

நாக்பூர்: பழைய அரசு வாகனங்களைப் போல, 15 ஆண்டுகள் பழமையான தனியார் வாகனங்களையும் அழிக்க விரைவில் கொள்கை கொண்டு வரப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறி உள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒன்றிய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஸ்வினி குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க ஒன்றிய அரசு கொள்கையை சமீபத்தில் கொண்டு வந்தது. இதே போல, பழைய தனியார் வாகனங்களை அழிக்க விரைவில் கொள்கை கொண்டு வரப்படும். இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகம், பிற 9 துறைகளுடன் சமீபத்தில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துள்ளது. பழைய வாகனங்கள் அழிக்க தரப்பட்ட சான்றிதழ் மூலம் புதிய வாகனங்கள் வாங்கும் போது 25 சதவீத விலை சலுகை வழங்கப்படும். அதோடு வாகன பதிவும் இலவசமாக செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: