அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் தரப்பு ஒரு காயகல்பம் கம்பெனி. இந்த கம்பெனியில் உள்ள ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டிகள் விரக்தியின் உச்சம். அரசியலில் பண்பாடு இருக்க வேண்டும். வார்த்தைகள் பயன்படுத்தும்போது அவர்கள் நிதானமாக தான் இருக்கிறார்களா, நிதானத்ைத இழந்து பேசுகிறார்களா என்று அனைவரும் பார்க்கின்றனர். பிக்பாக்ெகட் என்று கூறுகிறார். உண்மையில் அவர் தான் பிக்பாக்கெட் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்.

அதிமுக அலுவலகத்தை, ஓபிஎஸ் தலைமையில் குண்டர்களுடன் வந்து சூறையாடியது அது தான் பிக்பாக்கெட். அதற்காக நீதிமன்றம் சென்று நீதி நிலைநாட்டி கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. கடைசியில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கூறிவிட்டார். கடந்த மக்களவை தேர்தலில் தன் மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர். கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த அரசை கலைக்க நினைத்தவர். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று கூறியவர் ஓபிஎஸ் தான்.

பண்ருட்டி, வாங்கிய பணத்துக்கு ஓபிஎஸ் கைக்கூலியாக செயல்படுகிறார். மகாபாரதத்தில் சகுனி எப்படியோ அதைப்போன்று அரசியலில் சகுனி பண்ருட்டி ராமச்சந்திரன். கட்சியானது எடப்பாடி தலைமையில் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறது. மேலும், கட்சிக்கு ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்சியை பொறுத்தரைவரையில் ஒரு கோடியே 44 லட்சம் தொண்டர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் எம்எல்ஏக்கள்,முன்னாள் எம்பிக்கள் என அத்தனைப்பேருமே எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஓபிஎஸ் ஒரு கூவம் நதியை போன்றவர். இவர்கள் எல்லாம் மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றார்.

Related Stories: