கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 20,000 பேர் கைது டிஜிபி தகவல்

தென்காசி: டிஜிபி சைலேந்திர பாபு நேற்று தென்காசியில் அளித்த பேட்டி: போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் திட்டம். தற்போது கஞ்சா வேட்டை 1, 2, 3, 4 என்ற பெயரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 750 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

80 சதவீதம் கஞ்சா நடமாட்டம் குறைந்துள்ளது. சில காவல் நிலைய எல்லைகளில் கஞ்சா விற்பனை இல்லை என்று அறிவித்துள்ளனர். விரைவில் ஒரு சில மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை இல்லை என்ற அறிவிப்பு வரும். மாத்திரை உள்ளிட்ட மாற்று வழிகளை தேடுவதை தடுப்பதற்காக மருத்துவத்துறை மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories: