×

ஐகோர்ட் பகுதியில் டிரோன் பறக்கவிட்ட 3 வாலிபர்கள் கைது

சென்னை:  பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை ஆவின் நுழைவாயில் அருகில் நேற்று டிரோன் கேமரா மூலம் 3 பேர் வீடியோ எடுத்தனர். அவர்கள் 3 பேரை பிடித்து, டிரோன் கேமராவை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்தனர். எஸ்பினேடு ஆய்வாளர் காளிராஜ் அவர்களிடம்விசாரணை நடத்தியதில், திருவல்லிக்கேணிவித்யாசாகர் (27), விக்னேஸ்வரன் (30), கொருக்குப்பேட்டை சூர்யா (30) என்பது தெரிய வந்தது.  அவர்களை எச்சரித்து, இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு, சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.


Tags : Icourt , 3 youths arrested for flying a drone in Icourt area
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்