×

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது.

ந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,Weather Centre , Chance of moderate rain, Meteorological Center Information, Rain in Tamil Nadu
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...