செங்கல்பட்டு: பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்ட அவர் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த 19ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் முழுமையாக நலம்பெற்றதை அடுத்து மருத்துவ வசதிக்காக கடந்த 26ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் 3 நாட்கள் அவரை விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது….
The post பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.
