×

கும்பகோணம் அருகே ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற சேன்ற கணவர் படுகாயம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரை காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் குணசேகரன் (60). இவரது மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் ஊராட்சி மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவரது கணவர் குணசேகரனுக்கும் இவருக்கும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமதி நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை தனக்கு தானே ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டு வீட்டின் ரூம் கதவை மூடிவிட்டார். அவர் அலறும் சத்தம் கேட்டு கணவர் குணசேகரன் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிய மனைவி சுமதியை காப்பாற்ற முயன்றார்.

அப்போது அவரும் படுகாயமடைந்தார். இதில் படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரையும் சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது கணவர் குணசேகரன் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Kumbakonam , Panchayat head commits suicide near Kumbakonam: husband who had to save him is badly injured
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்