×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளி மண்டல கீழடுக்கு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chennai Meteorological Survey Centre , Chance of rain in 10 districts including Chennai, Thiruvallur, Kanchipuram in next 3 hours: Chennai Meteorological Center Information
× RELATED மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து...