சென்னை விமானநிலைய முனையங்களுக்கு காமராஜர், அண்ணா பெயர்: ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்கான ஆலோசனை குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை விமான நிலைய கூட்ட அரங்கில் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், விமான நிலைய இயக்குனர் சரத்குமார், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ.,க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை புதிய விமான நிலையம் கட்டுமான பணிகள் நிறைவடைந்தும், சென்னை உள்நாட்டு விமான நிலைய முகப்பில் காமராஜர் விமான நிலையம் என்றும், சென்னை சர்வதேச விமான நிலைய முகப்பில், அண்ணா விமான நிலையம் என்றும் பெயர் பலகைகளை, இந்திய விமான நிலைய ஆணையம் மீண்டும் வைக்கவேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: