×

எழுத்தாளர் பேராசிரியர் மங்கள முருகேசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: பெரியார் சிந்தனையாளர், திராவிட இயக்க எழுத்தாளர் பேராசிரியர் மங்கள முருகேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல்: பெரியாரியச் சிந்தனையாளரும், திராவிட இயக்கத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பேராசிரியர் மங்கள முருகேசன் மறைவுற்ற செய்தியறிந் இத்தகைய பெருமை வாய்ந்த அவரின் மறைவு திராவிட இயக்க அறிவுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள்,  மாணவர்கள் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Tags : Chief Minister ,Mangala Murugesan , Chief Minister condoles death of author Professor Mangala Murugesan
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?