ஏரியில் ஏற முயன்ற ஒற்றை யானை மின்கம்பி உரசி பலி

தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பெரிய ஏரியில், நேற்று அதிகாலை 5 மணியளவில் ஒற்றை ஆண் யானை நின்றிருந்தது. வனத்துறையினர் வருவதற்குள் அந்த யானை மேட்டுப்பட்டி வழியாக திப்பம்பட்டி சாலையை கடந்து சென்றது. கிராம மக்கள், யானையை திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். யானையை பின்தொடர்ந்து வனத்துறையினரும் சென்றனர்.  வகுத்தம்பட்டி வழியாக கம்பைநல்லூர் கெலவள்ளி ஏரிக்கரைக்கு சென்றது.  ஏரியில் இருந்து மேல்பகுதிக்கு ஏறிச்செல்ல முயன்றபோது, தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்த யானை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த யானைக்கு 27 வயது என்பது தெரியவந்துள்ளது.

Related Stories: