×

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  மொத்தம் 76 மாதிரிகளில்  உருமாறிய எக்ஸ்பிபி.1.16  வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில தான்  உருமாறிய எக்ஸ்பிபி.1.16  கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பல மாநிலங்களில் கொரோனா  மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மாதிரிகளின்படி இந்த புதிய  உருமாறிய வைரசினால் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  இதில் கர்நாடகாவில் 30 ,மகாராஷ்டிரா 29 , புதுச்சேரி 7 , டெல்லி 5 ,  தெலங்கானா 2 ,குஜராத், இமாச்சல் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒருவரும் புதிய வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.  

இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி முன்னாள் இயக்குனரான  விபின்  வசிஸ்தா டிவிட்டரில் பதிவிடுகையில், மொத்தம் 12 நாடுகளில் எக்ஸ்பிபி.1.16 வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக  அமெரிக்கா, புருனே, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து உள்ளன என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே நாட்டில் 126நாட்களுக்கு பின் ஒரே நாளில் கொரோனா  தொற்று 800 ஐ கடந்துள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது.

Tags : India , Corona is increasing again in India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...