நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஜெய்ப்பூர்: நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறினார். லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். இதுபற்றி தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது: ராகுல் காந்தி இதைச் சொன்னார்.

அதைத்சொன்னார் என்பதை விட  அவருக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர்  நாடாளுமன்றத்தில்  பேசும்போது, ​​ஏதாவது தவறு காணப்பட்டால், அவரிடம் கேள்வி கேளுங்கள். அதுதான் ஜனநாயகம். நாங்கள் அரசை கவிழ்க்க முடியாது. ஆனால் நாங்கள் பிரச்சினையை எழுப்பி அரசிடம் பதில் தேடலாம். அதில் சில தீர்வையும் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: