×

இந்தியா - இலங்கையுடனான ரத்த உறவுகள் ஆழமானவை: வெளியுறவு அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: ெடல்லியில் நடைபெற்ற இலங்கை கட்டிடக் கலைஞர் ‘ஜெஃப்ரி பாவா’ கண்காட்சியைத் தொடங்கி வைத்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் கடனில் தத்தளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவியை செய்து வருகிறது. ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் அறங்காவலர் சஞ்சய் குல்துங்காவும், நானும் இந்தியா மற்றும் இலங்கையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, ரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது; இந்தியா - இலங்கையுடனான ரத்த உறவுகள் ஆழமானவை என்பதை அவருக்கு நினைவூட்டினேன். இக்கட்டான தருணத்தில் இலங்கைக்கு பக்கபலமாக நின்று அனைத்து உதவிகளையும் மேற்கொண்டோம்.

இலங்கையை நினைக்கும் போது ஜெஃப்ரி பாவா தான் என் நினைவுக்கு வருகிறார். நவீனத்துவ இயக்கத்தின் தந்தையான அவரது சாதனைகள் இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பரவியுள்ளது’ என்றார். முன்னதாக மற்றொரு நிகழ்வில், இலங்கை வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் அலி சப்ரி பேசுகையில், ‘உலகின் வேறு எந்த நாட்டையும் காட்டிலும் இலங்கைக்கு அதிகமாக உதவியது இந்தியா தான்’ என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

Tags : India ,Sri Lanka ,Foreign Minister , Blood ties with India-Sri Lanka run deep: Foreign Minister's speech
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...