×

மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு மணீஷ் சிசோடியாவுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு

டெல்லி: மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் குடும்பத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த  26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. சிபிஐ கைதையடுத்து டெல்லி துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா விலகினார். ஹவாலா பண மோசடி வழக்கில் கைதான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் ராஜினாமா செய்தார். சிசோடியாவுக்கு கவனித்து வந்தத் துறைகளை அதிஷி, ஜெயின் வசம் இருந்தத் துறைகளுக்கு பரத்வாஜ் என்பவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பதவியேற்றுவிட்டனர். அவர்களுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினர் அந்த வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்துடன் அரசு பங்களாவில் தங்கியுள்ளனர். இதனால் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அரசு இல்லத்துக்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 21ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து கொடுக்குமாறு சிசோடியா மற்றும் ஜெய்ன் குடும்பத்தினருக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : Sisodia ,Government House , PWD orders Manish Sisodia to vacate government house by March 21
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!