×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 62,938 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,751 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.24 கோடி காணிக்கை செலுத்தினர்.

சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 18 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


Tags : thirupati elemalayan , Devotees wait 24 hours for darshan at Tirupati Eyumalayan temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்க...