செங்கல்பட்டு: மறைமலைநகரில் இருசக்கரன வாகன திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், முத்துராமலிங்கம் தெருவில் வசிப்பவர் பழனிச்சாமி. பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டுவாசலில் தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பைக்கை காணவில்ைல. திருடு போனது தெரியந்தது.
பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காமிராவை பழனிச்சாமி ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர், பைக்கை திருடி செல்வது தெரியவந்தது. இதேபோல் மறைமலைநகரின் பல்வேறு பகுதிகளில் கடை மற்றும் வீட்டுவாசலின் முன்பு நின்றிருக்கும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோவது அதிகரித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசில், சிசிடிவி காமிரா பதிவுகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காமிரா பதிவுகளில் உள்ள உருவங்களை வைத்து விசாரித்து வருகின்றனர்.