சர்வாதிகாரி போல செயல்படுகிறார் ஈபிஎஸ்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எதுவும் முறைப்படி நடக்கவில்லை.. ஓபிஎஸ் சாடல்..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எதுவும் முறைப்படி நடக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக்பாக்கெட் அடிப்பது போல் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகின்றனர் என ஓபிஎஸ் கூறினார். அதிமுக பொதுக்குழு சம்பவத்திற்கு பின் தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். ஈபிஎஸ்க்கு ஆதரவாக விதிகளை மாற்றியமைத்து தேர்தலை அறிவித்துள்ளதாக ஓபிஎஸ் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மேலும் ஏப்ரல் 2வது  வாரத்தில் திருச்சியில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தப்படும். அதிமுகவில் தொண்டர்கள் அதிகமாகவில்லை; குண்டர்கள் எண்ணிக்கை தான் அதிகமாகி விட்டதாகவும் விமர்சித்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளது. முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு  மனு விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: