அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்படுகின்றனர் - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சட்ட விதிகளை பின்பற்றாமல் திடீரென தேர்தலை அறிவித்துள்ளது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் புகார்கள் இருக்கும் போது தேர்தல் நடத்தலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இனி திருந்துவார்கள், திரும்பி வருவார்கள் என நினைக்கவில்லை.

அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்படுவதாகவும் ஓபிஎஸ் தரப்பில் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய ராமச்சந்திரன், ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தை கூட எடப்பாடி பழனிசாமி தரப்பு புரிந்து கொள்ளவில்லை. அதிமுகவை எடப்பாடி தரப்பு தொடர்ந்து அழிவுப்பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கையை சட்டரீதியாக சந்திக்க தயாராகி வருகிறோம். மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் இறுதி வரை உடன் இருந்தவர்கள் நாங்கள் என்றும் கூறினார்.

Related Stories: