×

தமிழகம், புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 22ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழை பெய்கிறது. சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai Meteorological Department , Tamil Nadu, Puducherry, Rain, Chennai Meteorological Center
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்