பிக் பாக்கெட் அடிப்பது போன்று பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை: பிக் பாக்கெட் அடிப்பது போன்று பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எதுவும் முறைப்படி நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். சாதாரண தொண்டன் கூட போட்டியிட முடியும் என்ற சூழலை ஈபிஎஸ் தரப்பு மாற்றிவிட்டது என ஓபிஎஸ் விமர்சித்தார்.

Related Stories: