×

அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்..!!

தேனி: அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாச்சல பிரதேசத்தினுடைய மேற்கு கமாக் மாவட்டத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த  பிபிபி ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, டெல்லி விமானப்படை தலைமையகம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் வீரர் ரெட்டியின் உடல் டெல்லியிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவிற்கும், மேஜர் ஜெயந்தின் உடல் சொந்த ஊரான தேனிக்கும் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது உடலுக்கு அரசு தரப்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இறுதி அஞ்சலி செலுத்தினர். கிராமமே மிக பெரிய சோகத்தில் மூழ்கியது. அவருடன் பணியாற்றியவர்களும், முன்னாள் ராணுவவீரர்களும் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஜெயந்தின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இளம் உதவி விமானி  ஜெயந்த் தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை, மல்லிகா அவர்களின் மகனான ஜெயந்த் என தெரிய வந்தது. ஜெயந்த் கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்ததாகவும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செல்ல சாரா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து, தற்போது அவர்களுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.


Tags : Major Jayant ,Arunachalam , Helicopter crash, martyred Major's body, gunshots, cremation
× RELATED அக்கரன் – திரைவிமர்சனம்