×

நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே உரிமை கோரலாம் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே கேளிக்கை வரி விலக்கு கோர முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ திரைப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், ஐ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழில் ஐ என்பது வியப்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிக்க சலுகையாக அரசு கேளிக்கை வரி விலக்களிக்கிறது. கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம். பெயரில் தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்காகவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags : Can claim only if conditions are met Entertainment tax exemption can't be claimed only if name is in Tamil: High Court opined
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...