×

5 லட்சம் பேருக்கு 19ம்தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு

சென்னை: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள 5 லட்சத்து 28 ஆயிரம் கற்போர் பயனடையும் வகையில் 28 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள அனைவருக்கும் 19ம் தேத அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்போர் மையங்கள், வட்டார வள மையங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களை அணுகலாம்.

Tags : Basic literacy test for 5 lakh people on 19th
× RELATED தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்