×

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 160 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் கடந்த 10.1.2020 முதல் 22.1.2020 வரை நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 19 தங்கப்பதக்கம், 30 வெள்ளிப்பதக்கம் மற்றும் 20 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 69 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 137 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள், கடந்த 2020 அக்டோபர் 10 முதல் 25 வரை நடந்த ஆசிய ஆன்லைன் நேஷன்ஸ் கோப்பைக்கான சதுரங்க போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்று தங்க பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதா மற்றும் ஆர்.வைஷாலி ஆகிய இருவருக்கும் உயரிய ஊக்கத் தொகையாக தலா ரூ.6 லட்சம் வீதம் மொத்தம் 12 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், குஜராத் மாநிலம், காந்திநகரில் கடந்த 21.3.2021 முதல் 25.3.2021 வரை நடந்த தேசிய அளவிலான 15வது ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 1 தங்க பதக்கம் மற்றும் குழு போட்டிகளில் 1 தங்க பதக்கம், என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 9 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் உயரிய ஊக்கத்தொகையாக 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள், லண்டன், பர்மிங்காமில் கடந்த 10.8.2022 முதல் 20.8.2022 வரை நடந்த காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் சேபர் குழு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஜே.எஸ்.ஜெபர்லினுக்கு அரசின் உயரிய ஊக்கத்தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 8.1.2020 முதல் 10.1.2020 வரை நடந்த அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான கராத்தே போட்டிகளில் தனிநபர் போட்டியில் 1 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம், 2 வெண்கல பதக்கம், ஆண்கள் குழு போட்டியில் 1 வெள்ளி பதக்கம் மற்றும் பெண்கள் குழு போட்டியில் 1 வெள்ளி பதக்கம், என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 11 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் உயரிய ஊக்கத்தொகையாக 19 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 8 விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வைத்து உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்றுநர்களுக்கான நேர்முக தேர்வு 2.3.2023 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த தேர்வில் பல்வேறு விளையாட்டுகளை சார்ந்த 187 விளையாட்டு பயிற்றுநர்கள் பங்கேற்றனர். தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 76 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin. , 160 sportsmen and women who have won medals in national and international sports will receive Rs 2.25 crore higher incentives: Chief Minister M.K.Stalin
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...