×

பரமக்குடி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அதிமுக கவுன்சிலருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியது

ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய தடயங்களை சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், பரமக்குடியை சேர்ந்த நகராட்சி 3வது வார்டு அதிமுக உறுப்பினர் சிகாமணி (44),  மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகம்மது(34), பரமக்குடி புதுநகரைச் சேர்ந்த கயல்விழி(45), உமா(34) ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனால், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிகாமணி உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் கடந்த 3 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள்  கிடைத்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் சிகாமணியின் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கடைகள் மற்றும் இதில் தொடர்புடைய  மற்றவர்களின் வீடு, சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட லாட்ஜ் ஆகிய சில இடங்களில்  போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய தடயங்கள் சிக்கியதாக  போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் விரைவு மகளிர்  நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தினர். 5 பேரையும் வரும் ஏப்.3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Paramakudi ,AIADMK , Paramakudi student gang-rape case important documents seized: AIADMK councilor caught in raids
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த...