×

மம்தாவுடன் அகிலேஷ் சந்திப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் நேற்று சந்தித்து பேசினார். வரும்2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பாஜவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்து களம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அகிலேஷ் கூறுகையில்,‘‘பாஜவை தோற்கடிக்க மம்தா கட்சிக்கு சமாஜ்வாடி உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ், பாஜ ஆகிய 2 கட்சிகளிடம் இருந்து சமாஜ்வாடி விலகி நிற்கும்’’ என்றார்.
திரிணாமுல் எம்பி சுதிப் பண்டோபாத்யாய கூறுகையில்,‘‘ தற்போது மூன்றாவது அணி பற்றி  சிந்திக்கவில்லை.நாங்கள் எங்கள் வழியில் செல்வோம். காங்கிரஸ்,பாஜ ஆகிய கட்சிகளை விட்டு திரிணாமுல் விலகியே நிற்கும்’’ என்றார்.

Tags : Akhilesh ,Mamata , Akhilesh meets Mamata
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை