மருந்தாளுனர்கள் மருந்து சீட்டு எழுத அனுமதியா? ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: மருந்தாளுனர்கள் மருந்து சீட்டு எழுதுவதை அனுமதிக்கும் திட்டத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் தரவில்லை என ஒன்றிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். மக்களவையில் ஒன்றிய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களை நியமிப்பது, அதற்கான தகுதி மற்றும் சம்பளம் போன்றவை அந்தந்த மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டதாகும்.  பார்மஸி தொழில் ஒழுங்குபடுத்துதல் விதிமுறைகள் 2015 என்னும் சட்டத்தை ஒன்றிய பார்மஸி கவுன்சில் உருவாக்கியுள்ளது. அதன்படி, டி. பார்ம் படிப்பு படித்தவர்கள் மருத்துவமனைகளின் பல பிரிவுகளில் பணிபுரிய விதிகளில் இடமளிக்கப்பட்டுள்ளது. மருந்தாளுனர்கள் மருந்து சீட்டு எழுதி தருவதற்கு அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: