சட்ட மேலவை அமைக்க 4 மாநிலங்கள் கடிதம்

புதுடெல்லி: நாட்டில் சட்டமேலவை அமைக்க 4 மாநிலங்கள் கடிதம் எழுதி அனுமதி கேட்டுள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதில்: ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்ட மேலவைகளை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் வந்துள்ளன. அவை அரசின் பரிசீலனையில் உள்ளன. இந்த விஷயத்தில் அனுமதி வழங்குவது குறித்து குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: